jkr

சரியான தமிழ் தலைமைத்துவத்தை தெரிவு செய்தல் வேண்டும்.

கடந்த காலங்களில் தவறான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்ததன் மூலம் தேவையற்ற இழப்புக்களையும் துன்பங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள நேரிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருங்காலத்தில் புத்தி சாதுரியத்துடன் சரியான தலைமைத்துவத்தை இனங்கண்டு பலப்படுத்துவீர்களாயின் ஐந்து வருடகாலத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியதை ஐந்து மாதகாலத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவி;த்தார்.

வவுனியா மாவட்டத்தில் தொண்டராசிரியர்களாக நீண்டகாலம் பணியாற்றி வரும் ஆசிரியர்களை வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் ஒரிரு வாரங்களில் மேற்படி தொண்டராசிரியர்களுக்கு ஆசிரிய உதவியாளர்களுக்காக வழங்கப்படவுள்ள நியமனங்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடமையாற்றியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி இந்த நியமனத்தைப் பெறும் தொண்டராசிரியர்கள் 2005 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள் தொடர்ந்தேர்ச்சியாக மூன்று வருட கால சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனவரியில் நியமனங்களை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இந்த நியமனங்களை நிரந்தர நியமனமாக உறுதிப்படுத்திக் கொள்வது தொண்டர் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளதெனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து அதற்கான அனுமதியைப் பெறுவதன் மூலமே நியமனங்களை வழங்கவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சரியான தமிழ் தலைமைத்துவத்தை தெரிவு செய்தல் வேண்டும்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates