jkr

பொன்சேகா வெல்வார் என்று நான் நினைக்கவில்லை! பிரபல பத்திரிகையாளர் ‘துக்ளக்’ சோ அபிப்பிராயம்!!


துக்ளக்’ சஞ்சிகையின் ஆசிரியர் சோ.ராமசாமி, இந்தியாவின் பிரபல அரசியல் விமர்சகர்களில் ஒருவர். தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளராக சோ இருந்த போதிலும், அவரது கருத்துகளை, அவரை ஏற்காதவர்களும் கூட புறந்தள்ளுவதில்லை. அதற்குக் காரணம், அவர் தனது விமர்சனங்களை கட்சி நிலைப்பாட்டிலிருந்து சொல்வதை விட, உண்மை நிலவரங்களிலிருந்து கூறுவது தான்.

இதற்கு உதாரணமாக, அவர் இலங்கை தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எழுதிய பல கட்டுரைகளைக் குறிப்பிடலாம். அவர் எதிர்வு கூறியதின் அடிப்படையிலேயே பின்னர் இலங்கையில் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழர் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே சந்தர்ப்பவாதம் எதுவுமின்றி ஒரே நிலைப்பாட்டைப் பின்பற்றிய ஒருவராக சோ.ராமசாமி அவர்களைக் கூற முடியும்.

“துக்ளக்’கின் அண்மைய இதழ் ஒன்றில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக, வாசகர்கள் இருவர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சோ அளித்த பதில்களையும் அவற்றின் முக்கியத்துவம் கருதி கீழே தருகின்றோம். தமிழகத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் ‘துக்ளக்’கில் வெளிவரும் கேள்வி – பதில் பகுதியே மிகப் பிரசித்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

கே - இலங்கை அதிபராக பொன்சேகா வந்தால், ஏதாவது மாற்றம் ஏற்படுமா?

ப – புதிதாக அரசியலுக்கு வந்து, ஏற்கெனவே அரசியலில் வேரூன்றிய சில கட்சிகளின் ஆதரவில், அவர் போடடியிடப் போகிறார். அவர் வென்றால் கூட (வெல்வார் என்று நான் நினைக்கவில்லை), அக்கட்சிகளின் தயவில்தான் அவர் இயங்க வேண்டும். அவருடைய பேச்சு, செயல் எல்லாமே, ‘அடங்கிப்’ போகிறவராக அவரைக் காட்டவில்லை. தன்னைப் பற்றி மிக உயர்வான எண்ணம் கொண்ட அவர், மற்ற கட்சிகளின் தயவில் இயங்குகிறபோது, திணறிப் போவார். நிர்வாகம் சரியாக இயங்குவதற்கு இது உகந்த பின்னணி அல்ல.

கே - இலங்கையில் அதிபர் ராஜபக்க்ஷேக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதா? அல்லது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அதிகரித்துள்ளதா?

ப – எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை எந்த அளவிற்கு ஆதரவைத் தேடித் தருகிறதோ – அந்த அளவில் மட்டுமே பொன்சேகாவின் ஆதரவு நிற்கும். ராஜபக்க்ஷேக்கு ஒரு சில கட்சிகளின் கூட்டணி கிட்டினால், எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆதரவு போதாது என்ற நிலை பொன்சேகாவுக்கு ஏற்படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொன்சேகா வெல்வார் என்று நான் நினைக்கவில்லை! பிரபல பத்திரிகையாளர் ‘துக்ளக்’ சோ அபிப்பிராயம்!!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates