மர்மமான முறையில் சிறுமி மரணம் : பம்பேகம தோட்டத்தில் பதற்ற நிலை

அவிசாவளை பம்பேகம தோட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 15 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி மாவட்டம் தெல்தொட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா குமுதினி என்ற மாணவி தோட்ட முகாமையாளராகப் பணிபுரியும் தனவந்தர் ஒருவரின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
தெல்தொட்ட மலைமகள் வித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்வி பயின்ற குமுதினி எனும் மேற்படி சிறுமி, தரகர் ஒருவரின் மூலமாக அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது தந்தையுடன் கடந்த மாதம் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட குமுதினி தான் துன்புறுத்தப்படுவதாகத் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ராமையாவுக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் மகள் தூக்கிட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகள் தற்கொலை செய்துகொள்வதற்கு எதுவித குடும்பப் பிரச்சினையும் இல்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.







0 Response to "மர்மமான முறையில் சிறுமி மரணம் : பம்பேகம தோட்டத்தில் பதற்ற நிலை"
แสดงความคิดเห็น