jkr

பரபரப்பான போட்டியில் இந்தியா 3 ரன்களில் வெற்றி


இந்தியா இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடந்தது

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மனித்தது. துடுப்பாட்டத்தில் முதலில் களம் இறங்கிய சேவாக் - சச்சின் ஜோடி அதிரடியாக விளையாடினர். 48 பந்துகளில் சச்சின் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். 34 பந்துகளில் சேவாக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

இந்நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பெர்னாண்டோவின் பந்து வீச்சில் சச்சின்ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் சச்சின் 63 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.


இன்றைய ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் டோனி 34 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் டோனிக்கு இது 34ஆவது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டோனி சர்வதேச போட்டியில் 5000 ஓட்டங்களை இன்று கடந்துள்ளார்.

சேவாக் 102 பந்துகளில் 146 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 17 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அடுத்த சில நிமிடங்களில் டோனி 53 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

தொடர்ந்து களம் இறங்கிய கவுதம் காம்பீர் 8 பந்துகளில் 11 ஓட்டங்கள், சுரேஷ் ரெய்னா 16 ஓட்டங்கள், ஹர்பஜன் சிங் 11 ஓட்டங்கள், விராட் கோக்லி 27 ஓட்டங்கள், ரவிந்திர ஜடேஜா 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரவீன் குமார் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியா இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இலங்கை அணி இலக்கு 415ஆக நிர்ணயிக்கப்பட்டது.தரங்காவிற்கு முதலில் கோலி கேட்ச்சை கோட்டை விட அவரும் தில்ஷானும் முதல் விக்கெட்டுக்காக 24 ஓவர்களில் 168 ரன்களைச் சேர்த்தனர். ரவிந்தர் ஜடேஜாவை விட்டு வெளுத்து வாங்கிய தரங்கா 67 ரன்களில் ரெய்னா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அதன் பிறகு களமிறங்கினார் சங்கக்காரா, மனம்போன போக்கில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் விளாசு விளாசென்று விளாசினார். 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து குமார் பந்தை புல் செய்து ஸ்கொயர் லெக் பவுண்டரியில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் 12 ஓவர்களில் தில்ஷானும், சங்கக்காராவும் இணைந்து 128 ரன்களை விளாசினர். அவர் ஆட்டமிழக்கும் போது பவர் பிளே இருந்தது. இந்திய அணியைப் போலவே பவர் பிளேயில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத் துவங்கியது இலங்கை அணி. சங்கக்காரா ஆட்டமிழந்தவுடன் ஜெயசூரியா 5 ரன்கள் எடுத்து ஹர்பஜன் வீசிய நல்ல பந்திற்கு ஸ்டம்ப்டு ஆனார். அடுத்ததாக 160 ரன்களை 124 பந்துகளில் 20 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் பவுல்டு ஆனார். கடைசியாக ஜெயவர்தனே இர்ண்டாவது ரன் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். இடையில் சில கேட்ச்கள் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 40.2 ஓவர்களில் இலங்கை 345/5 என்று இருந்தபோது, கண்டாம்பியும், மேத்யூஸும் இணைந்து ரன்களை நிதானமாக சேர்த்தனர் இருவரும் இணைந்து சில மோசமான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி 48வது ஓவரில் ஸ்கோரை 401 ரன்களாக உயர்த்தினர். கடைசியில் கண்டாம்பி டெண்டுல்கரிடம் ரிஸ்க் எடுத்து ரன் அவுட் ஆனார். அப்போது 10 பந்துகளில் இலங்கைக்கு தேவை 14 ரன்களே. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களை அபாரமாக வீசினர் ஜாகீர் கானும் நெஹ்ராவும். இதனால் 411 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தோல்வி தழுவியது. சேவாகின் இன்னிங்ஸை ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் தில்ஷான் ஈடுகட்டினார் என்று கூறவேண்டும். ஷாட் தேர்வு, இடைவெளியில் அடிப்பது, நல்ல பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டுவது, விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவது என்று அனைத்திலும் சேவாக் போன்றே தில்ஷன் செயல்பட்டார். இந்த போட்டியை இவர், மற்றும் சங்கக்காராவின் ஆட்டத்திற்காகவாவது இலங்கை வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு அபாரமானது 10 ஓவர்களில் அவர் 58 ரன்களை விட்டுக் கொடுத்து அதிரடி மன்னர்களான ஜெயசூரியா, தில்ஷான் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். உண்மையில் இது போன்ற தார்ச்சாலை பிட்ச்களில் பந்து வீச்சில் சிறப்பாக இருப்பவர்களுக்குத்தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படவேண்டும். ஆனால்... ஆட்ட நாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார். இந்த பரபரப்பு வெற்றியில் திளைக்கும் நாம் இன்னொரு ரெக்கார்டையும் மறந்து விடக்கூடாது. 10 ஓவர்களில் விக்கெட்டின்றி 88 ரன்களை விட்டுக் கொடுத்த ஜாகீர்கான் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய பந்து வீச்சாளரானார். சேவாகின் நகைச்சுவை: ஆட்ட நாயகன் விருது பெற்ற சேவாக் விருது பெறும் போது ரவி சாஸ்திரி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கடைசி நிமிடத்தில் டென்ஷனாக இருந்தீர்களா (காயமடைந்ததால் சேவாக் பெவிலியனில் அமர்ந்திருந்தார்) என்று கேட்க, அதற்கு சேவாக், நான் இலங்கை அணி வெற்றி பெற ஆதரவு அளித்து வந்தேன், ஏனெனில் நான் ஆதரவு தெரிவிக்கும் அணி எப்போதும் தோல்வியடையும், அதனால் இந்தியா வெற்றி பெற நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று நகைச்சுவையாக பதிலளித்தார்..5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம் இலங்கை அணி ரசியர்களை ?????
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பரபரப்பான போட்டியில் இந்தியா 3 ரன்களில் வெற்றி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates