ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்
ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Response to "ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்"
แสดงความคิดเห็น