jkr

தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.


நிக்கொட் திட்டத்தின்கீழ் தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியில் அமைக்கப்பட்ட மூன்று அலகுகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் திறந்துவைத்தார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரிக்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கல்வி அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகத்தினரும் அழைத்துச்சென்றனர். இதனைத்தொடர்ந்து புதிய கட்டடத் தொகுதியை நாடா வெட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கு கல்லூரி அதிபர் திருமதி எஸ். ஆனந்தசயனன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முயற்சியினால் கடந்த யுத்த காலங்களில் நிலவி வந்த துன்ப சூழல்கள் நீங்கி தற்போது ஓர் அமைதி வாழ்விற்கான முன் ஏற்பாடுகள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் கல்வி சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதியின் வழிகாட்டலில் துரிதமாக மேம்பட்டு வருவது காணக்கூடியதாக இருக்கிறது. எனவே எதிர்வரும் நாட்களில் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சாகமாக பயன்படுத்துவதன் மூலம் மேலும் பல முன்னேற்றங்களுக்கு நாமே வழிசமைக்க முடியும் எனக்கூறினார்.

இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோ வடமாகாண கல்விப் பணிப்பாளர் இராசையா யாழ். மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி.செல்வரட்ணம் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் கல்வி அமைச்சின் ஆலோசகர் கலாநிதி தணிகாசலம்பிள்ளை உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் நடராசா ஆகியோருடன் ஆசிரியர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates