போக்குவரத்துச் சபை, ஹொட்டேல்களைத் திறக்குமாம்
தூர இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய ஹோட்டல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.
தூர இடங்களுக்கான சேவைகளின்போது பஸ்வண்டிகள் தாக சாந்திக்காக பஸ்வண்டிகளை நிறுத்தும் ஹோட்டல்களின் தரம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதைக் கவனத்திற்கொண்டே இந்த ஹோட்டல் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி என் கே ஏ டபிள்யூ குணவர்தன தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக காலி வீதி, இரத்தினபுரி வீதி, கண்டி வீதி சேவைகளுக்காக வீதியின் இரு மருங்கிலும் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இலங்கைப் போக்குவரத்துச் சபையால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டல்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பதுடன், உணவு மற்றும் பானங்களைச் சலுகை விலையில் விற்பனை செய்யுமெனவும் அவர் தெரிவித்தார்.
குறித்த வீதிகளில் செல்லும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்வண்டிகள் இந்த ஹோட்டல்களில் மட்டுமே தாகசாந்திக்காகத் தரித்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளையும் குறிப்பிட்ட ஹோட்டல்களில் தரித்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதம நிறைவேற்று அதிகாரி கூறினார்.
0 Response to "போக்குவரத்துச் சபை, ஹொட்டேல்களைத் திறக்குமாம்"
แสดงความคิดเห็น