ஏ 9 வீதி இன்று சகலருக்கும் திறக்கிறது
இன்றுமுதல் ஏ 9 வீதியூடாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி சகலரும் பயணிப்பதற்கும் வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏ 9 வீதியூடாகப் பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான பரிசோதனைகள் முன்னரைப் போன்று தொடருமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
நேற்றுவரை ஏ 9 வீதியினூடு பயனம் செய்வோரும் வாகனங்களும் பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
0 Response to "ஏ 9 வீதி இன்று சகலருக்கும் திறக்கிறது"
แสดงความคิดเห็น