jkr

ஜனாதிபதி தேர்தல் குறித்த விசேட கூட்டம் வவனியா நகரசபை காலச்சார மண்டபத்தில் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது! புளொட் முக்கியஸ்தர் உட்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்பு!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விசேட கூட்டமொன்று வவுனியா நகரசபை காலச்சார மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்றது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பா.உ பஷில் ராஜபக்ஷ, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அரச உயர்மட்ட அதிகாரிகள், வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வன்னிபிராந்திய அமைப்பாளரும், புளொட் மத்திய குழு உறுப்பினருமான சிவனேசன்(பவன்) உரையாற்றுகையில், கடந்தகால ஆட்சிகால நிகழ்வுகளை உற்று நோக்கும்போது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்துவந்த தலைவர்களில் அநேகமானவர்கள் தமது ஆட்சியின் இரண்டாவது காலப்பகுதியில்தான் இனப்பிரச்சினை தீர்வைப்பற்றி சற்று சிந்திக்க தொடங்கியிருந்தனர்.

இரு ஆட்சி காலங்களுக்கு மேல் ஜனாதிபதி ஒருவர் இருக்கமுடியாதென்பதே இதற்கு காரணமாகவிருந்தது. இந்த வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய மகிந்த சிந்தனையில் இரண்டாம் தவணையில் ஒரு நியாயமான தீர்வொன்றை நிச்சயமாக வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளதுடன், அவர் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி என்பனவற்றையும் உறுதியளித்தபடி மேற்கொண்டு வருகின்றார்.

எனவே மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தலில் வெற்றுபெறும் பட்சத்தில் அவர் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான ஒரு சரியான தீர்வினை முன்வைப்பாரென நம்ப இடமுண்டு. இதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஆகவே அவர் மேற்கொண்டுவரும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி உள்ளிட்ட வேலை திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும், தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்வினை முன்வைப்பதற்கும் ஏதுவாக இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மக்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான புளொட் ஆதரவாளர்கள் தமது கட்சியின் கறுப்பு சிவப்பு நிறத்திலான அடையாளத்தினையும் கொண்டிருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜனாதிபதி தேர்தல் குறித்த விசேட கூட்டம் வவனியா நகரசபை காலச்சார மண்டபத்தில் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது! புளொட் முக்கியஸ்தர் உட்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்பு!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates