jkr

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல பிரிவுகளையும் பார்வையிட்டார்.

சமூகசேவைகள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டுள்ளார்.
இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் தேவநேசன் நிர்வாக அதிகாரி பத்மநாதன் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து நோயாளர் விடுதிகள் உட்பட அனைத்து மருத்துவப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மற்றும் அமைக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டிடத் தொகுதிகளையும் பார்வையிட்டார்.
நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்தபோது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரச்சினைகளை பார்வையிட மீண்டுமொருமுறை நேரில் வருவதாக உறுதியளித்த அமைச்சர் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் இவ்விஜயத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவர்கள் விஜயம் மேற்கொண்ட இச்சந்தர்ப்பத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்த பல்வேறு நோயாளர்களுடனும் கலந்தரையாடி அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். அமைச்சருடன் உரையாடிய ஏறக்குறைய அனைத்து நோயாளர்களுமே வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் சிறப்பான சேவை குறித்து தமது திருப்தியை வெளியிட்டமை விசேட அம்சமாகும்.
மற்றொருபுறம் யாழ்ப்பாணத்தில் ஒசுசல நிறுவனத்தின் கிளை ஒன்றினை அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் வைத்தியசாலை பணிப்பாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துக் கூறியதை அடுத்து பொருத்தமான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். மேலும் வைத்தியசாலையில் கழிவுகள் குப்பைகள் அகற்றப்படுதல் தொடர்பாக நேரில் பார்வையிட்டு தமது அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர் கூடவே வருகை தந்திருந்த யாழ். மாநகரசபை பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ அவர்களுக்கு உரிய பணிப்புரைகளையும் வழங்கினார்.

இதேவேளை தம்மைச் சந்தித்த வைத்தியசாலையின் தனியார் சுத்திகரிப்பு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டுமென அவர்களிடம் தெரிவித்ததுடன் வைத்தியசாலையில் நிலவும் சுகாதாரத்துறை வெற்றிடங்களும் நிரப்பப்படும் எனவும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதன் பின்னர் இந்தப் பதவிகள் அனைத்தும் நிரப்படும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கான அமைச்சரின் இந்த விஜயத்தின் போது யாழ்மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா இளங்கோ றீகன் அமைச்சரின் செயலாளர் தயானந்தா ஊடகச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க ஈபிடிபியின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகல பிரிவுகளையும் பார்வையிட்டார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates