போலி கிரடிட் காட்டுகள் மூலம் இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்த இளைஞர் 308கிரடிட் கார்ட்டுகளுடன் கைது!!

போலியாக தயாரிக்கப்பட்ட கிரடிட் காட்டுகள் மூலம் இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்த இளைஞர் ஒருவரை 308கிரடிட் கார்ட்டுகளுடன் வெள்ளவத்தைப் பொலசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட போது அவரிடம் 28கார்ட்டுகள் இருந்ததாகவும் மேலதிக விசாரணைகளின்பின் தெகிவளை கல்வலையிலுள்ள அவரது வீட்டிலிருந்து 280கார்ட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் தீபன் என்பவர் வழங்கிய இரகசிய இலக்கத்துடன் இந்த கார்டுகள் தனக்கு தரப்பட்டதாகவும் சந்தேகநபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பாரிய மோசடியின் மூலகர்த்தாவான தீபன் ஏற்கனவே இந்தியா சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி கிரடிட் கார்ட்டுகள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை தானும் தீபனும் சமமாக பங்கிட்டு கொள்வதாகவும் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் வங்கிகளிலுள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் பல இலட்ச ரூபா பணத்தை தான் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல்வேறு வியாபார நிலையங்களில் கிறடிட் காட்டுகளை பயன்படுத்தி பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை வாங்கியுள்ளதையும் தெரிவித்துள்ளார். இதற்கு முன் குறித்த சந்தேகநபர் கிறடிட் கார்ட் மோசடி தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.







0 Response to "போலி கிரடிட் காட்டுகள் மூலம் இலட்சக்கணக்கான ரூபாவை மோசடி செய்த இளைஞர் 308கிரடிட் கார்ட்டுகளுடன் கைது!!"
แสดงความคิดเห็น