சவூதியில் இரு மாதங்களில் 44 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

சவூதி அரேபியா முழுவதும் கடந்த இரு மாதங்களாக பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இதுவரை 44 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகள் மற்றும் மணற்பரப்புகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த அதிநவீன, கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் ஏராளமான அளவில் கைப்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மன்சூர்-அல்-துர்கி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ரியாத் மற்றும் காசிம் மாகாணங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவரும் கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கையாள பயிற்சி பெற்றுள்ளனர். ஜூலை 9 முதல் இம்மாதம் 2ஆந் திகதி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் 17 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், 22 வெடிபொருள் பெட்டிகள் போன்ற ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. காசிம் மாகாணத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய 96 மின்னணு வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.







0 Response to "சவூதியில் இரு மாதங்களில் 44 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது"
แสดงความคิดเห็น