வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 9500 ஹெக்டேயரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாதுகாப்பு வலயங்களில் செய்கை பண்ணப்படாதிருந்த நெற்காணிகளும் தரிசு நிலங்களாக விடப்பட்டிருந்த காணிகளும் தற்போது சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளதால் அந்நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ்.மாவட்டத்தில் வீசிய புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் அழிந்துள்ளதால் அக்காணிகளுக்கு 7000 புசல் விதை நெல் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், கமநெகும திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட கமநல அபிவிருததி உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலபோக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம் மற்றும் உள்ளீடுகளை வழங்குவதற்கான இவற்றினைக் களஞ்சியப்படுத்துவதற்குக் கமநல அபிவிருத்தித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் 9500 ஹெக்டேயரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது."
แสดงความคิดเห็น