இடம்பெயர்ந்த மக்களில் ஒரு லட்சம் பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைடிக்கை

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் அடங்கலாக சுமார் ஒரு லட்சம் பேரை விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் சுமார் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்காகக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும், வீதிகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், மின்சார விநியோகச் செயற்பாடுகள் உட்பட உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியா ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







0 Response to "இடம்பெயர்ந்த மக்களில் ஒரு லட்சம் பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைடிக்கை"
แสดงความคิดเห็น