கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கோப்சிற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு

தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இடைக்குறிச்சி கூட்டுறவு நகரை ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்துள்ளார்.
18.08.2009 செவ்வாய்க்கிழமை மதியம் இடைக்குறிச்சி சிறப்புக் கூட்டுறவு நகர் தென்மராச்சிக் கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தலைவர் வே. விநாயக மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இத் திறப்புவிழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து உரை நிகழ்த்துகையில். தென்மராட்சிப் பகுதிகளில் வீதி புனரமைப்பு மற்றும் மின்சார வசதிகள் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இப் பிரதேசத்தினை மீண்டும் புதுப் பொலிவுடன் கட்டி எழுப்புவதற்கு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பல தியாகங்களின் மத்தியில் தற்போது அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் உயிர் வாழும் சுகந்திரம் பேச்சு சுகந்திரம் என்பன தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய சுதந்திரங்களும் ஜனநாயக நடவடிக்கைகளும் மறுக்கப்படும் பட்சத்தில் அவற்றினை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவர முடியும் என்றும் வன்முறை செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார். தென்மராட்சியில் தற்போது நடைமுறையில் உள்ள பயண அனுமதியைப் பெறுவதில்லுள்ள அசௌகரியங்களை குறைத்து ஏனைய பிரதேசங்களைப் போன்று சிரமங்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன் வரணிக்கான 754ம் இலக்க பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் கூட்டுறவு உதவி ஆணையாளர் பொ. சிவலிங்கம் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கோப்சிற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு"
แสดงความคิดเห็น