jkr

ராமேஸ்வரத்தில் நிலநடுக்கம்


ராமேஸ்வரத்தில் இன்று காலை நில நடுக்கம் உணரப்பட்டதாகச் சிலர் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் எதிரே தனியாருக்குச் சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இதில் ஹோட்டல் மற்றும் கடைகள் உள்ளன. இன்று காலை 8.30 மணியளவில் அப்பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோட்டலில் டீ போட்டுக்கொண்டிருந்த கடை உரிமையாளர் நாகவேல், காலுக்கு கீழே அதிகளவில் அதிர்வு ஏற்பட்டதால் அலறியடித்து வெளியே ஓடினார். கடைக்குள் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கேன் உள்ளிட்ட பொருட்கள் ஆடியன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ராமேஸ்வரத்தில் நிலநடுக்கம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates