நிவாரணக் கிராம மக்களின் அவலத்தில் அரசியல் கூடாது

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் அண்மையில் பெய்த மழை காரணமாகப் பாதிப்புக்கு உள்ளா கியிருப்பது பற்றி அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகள் கடந்த சில தினங்க ளாக ஊடகங்களில் வெளியாகின. பாராளு மன்றத்திலும் இவ்விடயம் விவாதத்துக்கு வந்தது.
எதிரணிக் கட்சிகள் எல்லாமே அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலேயே கருத்துத் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத் தினால் இம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அர சாங்கமும் இதை மறுக்கவில்லை. அதே நேரம் இம் மக்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு.
அக்கடப்பாட்டை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற உறுதிமொழி யைப் பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்திருக்கின்றார். இந்த உறுதிமொழிக்கு அமைய, சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் மாற்று ஏற்பாட்டுக்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு பற்றிப் பேசுபவர்கள் அம்மக்களின் நிரந்தரமான நலனிலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அம் மக்களின் நிரந்தரமான நலனில் அக்கறை இல்லாமல் இன்றைய அவலம் பற்றி மாத்திரம் பேசுவது மக்களின் துயரத்தில் அரசியல் லாபம் தேடும் முயற்சி யாகவே இருக்கும்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்மக் கள் உடனடியாக வெளியேறுவதற்கு அனும திக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. இது அம் மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வெளிப்பத்தவில்லை. கிராமங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலையில் இம் மக்கள் வெளியேறி அக்கிராமங்களுக்குச் செல்வதால் ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றி இக் கருத்தை முன்வைப்பவர்கள் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
இனப் பிரச்சினைக்கு நேரகாலத்தில் தீர்வு காண முடிந்திருக்குமானால் மக்கள் இடம் பெயர்வதற்கோ நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பதற்கோ தேவை இருந்திருக்காது. எனவே, இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டிய தார்மீகக் கடப்பாடு இம் மக்களின் இன்றைய அவல நிலை பற்றிப் பேசுகின்றவர்களுக்கு உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நிவாரணக் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு பற்றிக் கூடுதலான அக்கறையை வெளிப்ப டுத்துகின்றன. ஆனால் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் இவை அக்கறை செலுத்துவதாக இல்லை.
இன்று நிவாரணக் கிராமங்களில் தங்கி யுள்ள மக்கள் புதுமாத்தளனில் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த காலத்தில் இம் மக்களின் அவல நிலை பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனஞ் செலுத்தவில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
புலிகளைப் பாதுகாக்கும் முயற்சியிலேயே கூட்டமைப் பினர் அப்போது ஈடுபட்டார்கள். இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற் கான எந்த முயற்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி இனப் பிரச்சினை விடயத்தில் தொடர்ச்சி யாக நழுவல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் இக்கட்சியிடம் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அரசியல் தீர்வு என்ற பேச்சு எழுந்தாலே சீறிப் பாயும் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி இருக்கின்றது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பேசும் உரிமை இனப்பிரச்சினைக்கான தீர் வுக்குப் பங்களிப்புச் செய்யாத காரணத்தால் இக் கட்சிகளுக்கு இல்லையென யாரும் கூற முடியாது. நாமும் அவ்வாறு கூறவில்லை.
நிவாரணக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்க ளின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் அதே வேளை, தமிழ் பேசும் மக்கள் அனைவரி னதும் நலனைக் கவனத்தில் எடுத்து இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற் சியில் பங்காளிகள் ஆக வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

0 Response to "நிவாரணக் கிராம மக்களின் அவலத்தில் அரசியல் கூடாது"
แสดงความคิดเห็น