jkr

இந்தியக் கடற்படையால் 4 இலங்கை மீனவர்கள் கைது


இந்தியாவுக்குச் சொந்தமான மன்னார் வளைகுடா கடலெல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த 4 இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலையிலேயே இந்தநால்வரும் தூத்துக்குடி போலீசாரால், மன்னார் வளைகுடாவில் சுமார் 35 கடல் மைல் தூரத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியக் கடலெல்லைக்குள் இலங்கை மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும், அவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து காவலில் வைப்பதும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம். இவ்வாறு கைது செய்யப்பட்டு காவலில் இருந்த 45 இலங்கை மீனவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியக் கடற்படையால் 4 இலங்கை மீனவர்கள் கைது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates