jkr

புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகின்றது பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு


புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகின்றது. இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் அனைத்து முஸ்லிம்களையும் நோன்பு நோற்குமாறு கொழும்பு பெரியபள்ளிவாசல் கேட்டுள்ளது. ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பது தொடர்பான மாநாடு கொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது. ரமழான் மாதத்தின் தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அறிவிக்குமாறு பிறைக்குழு அனைத்து முஸ்லிம்களையும் கோரியிருந்தது. இதன்படி இன்று மாலை 6.24 மணிக்குப் பிறகு காலி, கிண்ணியா உள்ளிட்ட பல பிரதேசங்களில் தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தகவலை ஊர்ஜிதம் செய்த பிறைக்குழு, ஸஹ்பான் மாதத்திற்கான பிறையை 28 ஆக பூர்த்தி செய்வதென்றும் இன்றிரவை ரமழான் மாதத்தின் முதலாவது பிறையாகக் கொள்வதென்றும் தீர்மானமெடுத்தது. இதன் பிரகாரம் இன்று முதல் அடுத்த மாதத்திற்கான தலைப்பிறை தென்படும் வரை புனித ரமழான் நோன்பை முஸ்லிம்கள் அனைவரும் நோற்கவுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகின்றது பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates