வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கல்

வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஜனாதிபதி செயலகத்தினால் பதியப்பட்டுள்ள போதிலும் ஒரு லட்சத்தி ஐயாயிரம் பேருக்கான அடையாள அட்டைகளே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் அடையாள அட்டையில் பெயர் முகவரியுடன் அவர்களது தொழில் இறுதியாக வாழ்ந்த பிரதேச செயலாளர் பிரிவு அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களுடன் இவர்களுக்கான தொடர் இலக்கங்கள் பதியப்பட்டன. பிளாஸ்டிக் மட்டையில் புகைப்படமும் காணப்படும். இந்த அடையாள அட்டையில் காணப்படும் பார்கோட் எனப்படும் பகுதியில் குடும்பத்தினரது முழு விபரங்களும் மறைமுகமாக அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நடமாடும் சேவை மூலம் செயற்படுத்தப்படும் இந் நடவடிக்கையில் 35 முதல் 40 உத்தியோகத்தர்கள் ஈடுபடும் அதேவேளை அடையாள அட்டைகள் பொலிஸார் மூலமாகவும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.







0 Response to "வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கல்"
แสดงความคิดเห็น