jkr

தோழர் கூரே மறைவு: மகத்தான வாழ்வொன்றின் முடிவு



தி.ஸ்ரீதரன் (பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)
தோழர் உபாலி கூரே அவர்கள் இந்த நாட்டில் பிறந்து சமகாலத்தில் வாழ்ந்த உன்னதாமான மனிதர். ஆரம்பத்திலிருந்து இடதுசாரி தொழிலாளி வர்க்க அரசியலில் தீவிர ஈடுபாடுகாட்டிய உபாலி இனவாதத்தால் செல்லரித்துப்போயிருந்த இலங்கையின் சமூக அரசியல் தளத்தில் ஆரோக்கியமான மனிதராகப் திகழ்ந்தார். சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கமொன்றை கட்டியெழுப்புவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஜனநாயக முற்போக்கு அணியில் அவர் நின்றிருந்தார். இலங்கை சமசமாஜக்கட்சி, வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர மார்க்சியக்கட்சி, நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம், ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு, சமூக குழுக்களுக்கான மூலவள நிலையம் ஆகிய அமைப்புக்களில் அவரது பணி வௌ;வேறு காலகட்டங்களில் இடம்பெற்றது தோழர் உபாலி கூரே அவர்கள் பன்முக ஆழுமை கொண்டவராக காணப்பட்டார். 1981ல், யாழ் நூல் நிலையம், ஈழநாடு பத்திரிகை, புதிய சந்தை உட்பட அன்றைய ஆட்சியாளர்களினால் எரியுட்டப்பட்ட நேரத்தில் கொழும்பிலிருந்து மனித உரிமை வாதிகள், சமூக உணர்வாளர்களை அழைத்துக்கொண்டு துணிச்சலாக புகையிரத்தில் யாழ்ப்பாணம் வந்தவர். வணபிதா போல் கஸ்பஸ், தோழர் உபாலி கூரே, குமுதினி சாமுவல், உட்பட பலரும் வந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் அரச பயங்கரவாதம் என்ற பிரசுரத்தையும் அச்சிட்டுக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் வந்தி;ருந்த சூழ்நிலை ஆபத்து மிகுந்ததும், பதட்டமானதுமாகும். எரிதழல்கள் நெருப்பை உமிழ்ந்தபடி இருந்தபோது அவர்கள் வந்திருந்தர்கள். மிக மோசமானகால கட்டத்தில் அவர்கள் தெற்கிலிருந்து நட்புக்கரத்தை நீட்டியிருந்தார்கள். அப்போது நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் முன்னணி இடதுசாரியும், இலக்கியவாதியும் ,கல்விமானுமாகிய காலஞ்சென்ற தோழர் பரராசசிங்கம் அவர்களின் வீட்டில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. யாழில் செயற்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள,; இயக்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மிகவும் உணர்ச்சியும்- ஆவேசமும்- கோபமும் கொப்பழித்த கூட்டம் அது. இந்த அரச பயங்கரவாதம் அராஜகம் நடப்பதற்கு சிலமாதங்களுக்கு முன்னர் தான் 40 ஆயிரம் தொழிலாளர்கள் அன்றைய அரசினால் வேலை நீக்கம் ;செய்யப்பட்டிருந்தார்கள். இதே காலகட்டத்தில் தான் இலங்கை சமசமாஜக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான விவியன் குணவர்த்தனா பொலிசாரால் தாக்கப்பட்டிருந்தார். தென்னிலங்கையின் தொழிலாளிவர்க்கமும், தீவிர ஒடுக்குமுறைக்குட்பட்டிருந்த தமிழ் மக்களும் இணந்து செயற்படவேண்டிய வரலாற்றுக் காலகட்டமாக அது அமைந்திருந்தது. 1977 இனவன்முறை, 1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம,; 8 யாழ் இளைஞர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டது ,சிலரின் சடலங்கள் பண்ணைக்கடலில் மிதந்தது, 1981 இவ்;வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டது, யாழ் நூல் நிலையம,; ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ் புதியசந்தை, யாழ் பா.உ யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையானது. அரஜாகம் தலை விரித்தாடிய காலமது. இக்காலாத்தில் தோழர் உபாலி கூரே தொழிலாளவர்க்க, ஒடுக்கப்பட்ட தேசிய இன ஒற்றுமைக்காக முன்னணியல் நின்றார். சட்டத்துறையில் பரிஸ்டரும் விரிவுரையாளருமான தோழர் உபாலி ஸ்பானிய பெண்மணியை திருமணம் செய்தவர். அவருக்கு இரண்டு ஆணும் ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள். ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். லண்டனில் குடியேறிய தோழர் உபாலி சர்வதேச தொழிலாளவர்க்க இயக்கத்துடனும், புரட்சிகர சத்திகளுடனும், இலங்கையின் இடதுசாரி இயக்கம,; முற்போக்குச் சத்திகள் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் உறவை இடையறாது பேணி வந்தவர். அவ்வப்போது எமது நாட்டின் தேசிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கட்டுரைகளையும், கடிதங்களையும், புத்தகங்களையும் எழுதியவர். எழுதப்படுபவை தமிழ் சிங்கள மொழிகளில் மக்களைச் சென்றடையவேண்டும் என்று கரிசனை கொண்டவர். உன்னதமான ஒரு மனிதாபிமானி. சுதந்திரத்திற்காகப் போராடுபவர் மனித குலத்தின் மீதான அன்பினால் வழி நடத்தப் பட்டவேண்டும் என்று எப்போதும் திடமாக நம்பியவர்.1983 கலவரத்தை தொடர்ந்து பழியை இடதுசாரிகள் மீது ஜே. ஆர் அரசு சுமத்திய போது அதற்கெதிராக குரல் கொடுத்தவர்.ஈபிஆர்எல்எப் உடனான அவரது உறவு நீண்டதும் பாரம்பரியம் மிக்கதுமாகும். தோழர் பத்மநாபா உட்பட உமது தோழர்களுடன் நெருங்கிய தோழமை ப+ண்டிருந்தவர். 1980 களின் பிற்பகுதியில் இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் மோசமாக இருந்த காலத்தில் தோழர் சாந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உட்பட பல மனித உரிமை ஜனநாயக வாதிகளுடன் இணைந்து மனித உரிமைகளுக்காக செயற்பட்டவர்.
தோழர் பத்மநாபா நினைவுதினக் கூட்டங்கள், மறைந்த தோழர்களை நினைவு கூரும் கூட்டங்கள், அதிகாரப்பகிர்வு பற்றிய கருத்தரங்குகள் பலவற்றிலும் அவர் உரையாற்றியிருக்கிறார். எமது தோழர்களின் பொருளாதார நிலை பற்றிய கவலைகள் அவருக்கிருந்தன. அவர்கள் பொருளாதார ரீதியாக குறைந்தது சுயாதீனமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும், என்று எப்போதும் வலியுறுத்தினார். அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சமூக அரசியல் செயற்பாடுகளில் அவ்வப்போது அவர் பெறுமதியான ஆலோசனைகளை வழங்கினார். கணனித்தொழில் நுட்பம் கிராமமட்டதிற்கு சாதாரணமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாகச் செயற்பட்டார். சுனாமி வந்து எமது கிழக்கு கரையின் வாழ்வழிந்தபோது அங்கும் இனநல்லுறவின் குறியீடாக அவர் திகழ்ந்தார்.அவர் எப்போதும் முழுமையான மனிதராக வாழ்வதற்கான போராட்டதில் ஈடுபட்டிருந்தார்.தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கபட வேண்டும். இலங்கை பல இனமக்களின் ஐக்கிய தேசமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக அநீதிகள் ஒழியவேண்டும், நீதியான சமூக அமைப்பொன்று ஸ்தாபிக்கப்டவேண்டும் என்பதில் உறுதியாக நின்றிருந்தார். மலையகத்தொழிலாளர்களின் நலன்கள்- பெண் ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை உட்பட அனைத்து சமூக அநீதிகளும் ஒழிய வேண்டும் என்று அவர் இதய பூர்வமாகச் செயற்பட்டார்.சமூக சமத்துவமும் மக்களின் வாழ்வில் பிரகாசமும் நிலவும் எழிலார்ந்த இலங்கையை அவர் கனவு கண்டார். சமூக பொருளாதார அபிவிருத்திப்பணிகளிலும் அவரது ஈடுபாடு ஆழமாக இருந்தது. தொழிலாளர்களும், வறியமக்களும் சொந்தக்காலில் நிற்பதற்கான இடையறாத தேடலில் அவர் ஈடுபட்டிருந்தார்.நாடளாவிய அளவில் ஐக்கியப்பட்ட, மக்கள் சமூகங்களின்; தனித்துவங்களை ஏற்றுக்கொண்ட புதிய தொரு அரசியல் பண்பாடு கட்டியெழுப்பபடவேண்டும் என்று அவர் கனவு கண்டார். இனவாதத்தின் செல்வாக்கிற்கு அடிபணிய வேண்டாம் என்று தனது மருமகனுக்கு வினயமாக எழுதிய கடிதங்களும் அவரது மருமகன் அவருக்கு எழுதிய கடிதங்களும் அவரது மரணப்படுக்கைக்கு முன்னர் வெளிவந்திருந்தன. அவை இலக்கியப் பெறுமானமும் சரித்திரப் பெறுமானமும் மிக்கவை. யுத்தவெற்றிக் ;கொண்டாட்டங்;கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்துவது தார்மீகப் பண்பல்ல ,தமிழ் மக்களின் மனக்காயங்கள் ஆற்றப்படவேண்டும் என்பதை அவர் பிரதானமாக சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகைய மனிதர்களால் தான் உலகம் நம்பிக்கையுடன் இயங்குகிறது.மிகவும் இக்கட்டான காலத்தில் தோழர் உபாலி போன்ற உன்னதமான மனிதரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது. எங்கே துன்புறும்; மனிதர்கள் இருந்தார்களோ அவர்களின் பக்கமே தோழர் உபாலியின் மனம் நினறிருந்தது. நன்றி தோழரே உமக்கு எம் பிரியாவிடை! 70 ஆணடுகள் இவ்வுலகில் வாழ்ந்த நீர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உம் இதயத்தை நல்கியிருந்தீர்.எங்கள் இதயங்கள் கனக்கின்றன. கண்கள் பனி;கின்;றன. .போய் வாருங்கள் தோழரே! அன்னாரின் அன்பு துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் எம் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தி.ஸ்ரீதரன்பொதுச்செயலாளர்பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தோழர் கூரே மறைவு: மகத்தான வாழ்வொன்றின் முடிவு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates