இடம்பெயர்ந்தோரை அடை மழைக்கு முன் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை

அடைமழைக்கு முன்னதாக இய ன்றளவு இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவை கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதற்காக துரிதமாக மீள்குடியேற்ற வேண்டியமக்களை இனம் கண்டு வருவதோடு அடைமழை க்கு முகம் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமை ச்சர் குறிப்பிட்டார்.நிவாரணக் கிராமங்களின் நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது:-மழை காரணமாக, இடம் பெயர்ந்த மக்களில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் இரவோடு இரவாக அந்த மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த மக்களுக்கு உணவு மற்றும் வசதிகள் அளிக்கப்பட்டன. தற்பொழுது நிலைமை சுமுகமடைந்துள்ளதால் அவர்கள் முன்பு இருந்த முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறு எதிர்க்கட்சி எம். பிக்கள் பலரும் தெரிவித்தனர்.அந்த மக்களை துரிதமாக மீள் குடியேற்றுவதில் நாம் மிகவும் கரிசனையாக உள்ளோம். 2007 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த முசலி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடந்த வாரம் மீள்குடி யேற்றப்பட்டனர்.வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள சுமார் 15 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரம் பேர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் இருப்பிடங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் உடனடியாக மீள் குடி யேற்றப்படுவர்நிவாரணக் கிராமங்களில் உள்ள கிழக்கு மாகாண மக்கள் குறித்தும் மன்னார், வவுனியா பிரதேச மக்கள் தொடர்பாகவும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. அவர்க ளும் இயன்றளவு துரிதமாக மீள் குடியேற்றப்படுவர்.முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மிதி வெடிகளை இராணுவமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அகற்றி வருகின்றன. மாந்தை கிழக்கு வவுனியா வடக்கு, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிக ளில் மிதி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்ப ட்டுள்ளன.இராணுவம் ஒரு பகுதியிலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வேறு ஒருபகுதியிலும் மிதிவெடிகளை அகற்றி வருகின்றன. இராணுவத்தினர் துரிதமாக மிதிவெடி களை அகற்றி வருகின்ற போதிலும் பெருமளவு வெளி நாட்டு உதவி கிடைக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மெதுவாகவே மிதிவெடிகளை அகற்றி வருகின்றன. கிழக்கு மாகாணத்திலும் இராணுவமே பெரும் பகுதி மிதி வெடிகளை அகற்றியது.அடை மழைக்கு முகம் கொடுப்பது குறித்தும் தாழ்நிலங்களில் உள்ள நிவாரண கிராமங்கள் குறித்தும் நேற்று வவுனியா அரச அதிபர், வன்னி கட்டளையிடும் தளபதி ஆகியோருடன் பேச்சு நடத்தினேன். இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பது குறித்து இங்கு விரிவாக ஆராய ப்பட்டது. அடைமழைக்கு முன்னதாக இயன்றளவு மக்களை துரிதமாக மீள் குடியேற்ற உள்ளோம்.மிதிவெடிகள் துரிதமாக அகற்றப்படுவதற்கு ஏற்ப மக்களை விரைவாக மீள் குடியேற்றி வருகிறோம். எந்தெந்தப் பகுதிகளில் மக்களை துரிதமாக மீள் குடி யேற்ற முடியும் என்பது குறித்து பாதுகாப்புத் தரப்புடன் ஆராய்ந்து வருகிறோம். எவ்வளவு துரிதமாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்கள் மீள்குடியேற்றப்படுவர்.அரச சார்பற்ற நிறுவனமொன்று நிவாரணக் கிராமங்களில் உள்ள 260 அநாதைப் பிள்ளைகளை பொறுப்பேற்று பராமரிப்பதற்குரிய சகல வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.நிவாரணக் கிராமங்களில் உள்ள 10ஆயிரம் வயோதிபர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உறவினர்களுடன் அனுப்பப்பட்டுள்ளதோடு 4,500பேரை பொறுப்பேற்க உறவினர்கள் எவரும் முன்வராத தால் அவர்களை அனுப்புவது தாமதமாகியது.பெருமளவு குடும்பங்கள் பிரிந்திருப்பதாக ஜே. வி. பி. எம். பிக்கள் குற்றஞ் சாட்டினர். ஆனால் தினமும் பிரிந்த மக்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருகின்றனர். பல்லாயிரக் கணக்கானோர் தமது குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ள னர்.இதுவரை 90 வீதமானவர்கள் குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பிரிந்து செயற்படாது ஒன்றுபட்டு செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். மீள்குடியேற் றப் பணிகளை துரிதப்படுத்த தமிழரசு கட்சி உறுப்பின ர்களும் ஆலோசனை வழங்கலாம்.







0 Response to "இடம்பெயர்ந்தோரை அடை மழைக்கு முன் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை"
แสดงความคิดเห็น