இந்தியாவில் வறட்சி; உணவு இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் முடிவு

இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வறட்சியை அடுத்து உணவு தானியப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டால், அவற்றை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிப்பது தொடர்பாக மாநில வேளாண்துறை அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உணவு அமைச்சர் சரத்பவார் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பிரணாப் முகர்ஜி, வறட்சியால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க அரசு அனைத்து வகையிலும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
வறட்சியால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நிலத்தடி நீர் வளமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

0 Response to "இந்தியாவில் வறட்சி; உணவு இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் முடிவு"
แสดงความคิดเห็น