jkr

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை


விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான அவர்களது சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ வெளிநாடுகளை கேட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாதனின் கைதை அடுத்தே கோட்டபாய ராஜபக்ஷவின் இந்த கோரிக்கை வந்துள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு பல மேற்கத்தைய நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் சிரத்தையுடன் இருப்பது உண்மையானால், அவை விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள உறுப்பினர்களை தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டாபய கோரிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates