நுவரெலியா மாவட்டம் ஹற்றன் நகரிலுள்ள புகைப்பட நிலையமொன்றில்
நுவரெலியா மாவட்டம் ஹற்றன் நகரிலுள்ள புகைப்பட நிலையமொன்றில் யுவதியொருவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தார் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நகரவாசிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற ஹற்றன் பொலீசார் சந்தேகநபரையும் யுவதியையும் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த புகைப்பட நிலையத்தின் புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட புகைப்படக் கருவிகள் மற்றும் தொலைபேசி என்பவற்றையும் பொலீசார் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Response to "நுவரெலியா மாவட்டம் ஹற்றன் நகரிலுள்ள புகைப்பட நிலையமொன்றில்"
แสดงความคิดเห็น