jkr

மன்னார் நகரில் புலிகள் தொடர்பான சுவரொட்டிகள்



பிரபாகரனுடைய விடுதலைப் போராட்டத்தின் உள்ளடக்கம் என தலைப்பிடப்பட்ட புகைப்படங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் மன்னார் நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையிலேயே அவ்வமைப்பிற்கு எதிரான மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்ந்ததாகவும், அதேநேரம் தமிழ் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவல நிலைகளுக்குள் தள்ளப்பட்டிருந்ததாகவும் வெளிப்படுத்தும் புகைப்படங்களைத் தாங்கிய சுவரொட்டிகளே மன்னார் நகரப்பகுதி எங்கும் ஒட்டப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 30 வர்ணப் புகைப்படங்களைத் தாங்கிய இச்சுவரொட்டிகளை நகரப்பகுதி மக்கள் பார்வையிட்டதுடன் இரகசியமான முறையில் கிழித்தும் எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தமிழ் மக்களிடையே விடுதலைப்புலிகள் தொடர்பான கசப்பான எண்ணங்களை உருவாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தினதும் தீய சக்திகளினதும் கூட்டுச் சதியே என பலரும் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மன்னார் நகரில் புலிகள் தொடர்பான சுவரொட்டிகள்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates