எமது விமானப்படை உலகில் சிறந்தது : சீனக்குடாவில் கோதபாய தெரிவிப்பு

எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக் கூறினால் கூட அது மிகையாகாது. இவ்வாறான சக்தி வாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதிகாரிகளையே சாரும்" என பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். விமானப்படைப் பயிற்சியை முடித்து வெளியேறிய வீரர்களுக்குப் பட்டமளித்துக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சீனக்குடாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே கோதபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,"நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலப்பகுதியில் அதற்கு எதிராக யுத்தம் புரிந்த விமானப்படை வீரர்களுக்கும் படையில் சேர அனுமதித்த அவர்களது பெற்றோருக்கும் முதலில் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக் கூறினால் கூட அது மிகையாகாது. இவ்வாறான சக்தி வாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதிகாரிகளையே சாரும்.விசேடமாக வவுனியா மற்றும் திருகோணமலைப் பகுதியைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் எமது விமானப் படையினர் அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகின்றனர்.கடந்த 30 வருட காலமாக நாட்டில் பயங்கரவாதம் நிலவி வந்தது. இன்று அந்நிலை ஒழிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அவ்வாறான ஒரு சூழல் உருவாகாதிருக்க நாம் வழி சமைக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் கட்டளைக்கமைய தமது சேவையை உரிய வகையில் செய்ய வேண்டிய கடப்பாடு அனைத்து வீரர்களுக்கும் உள்ளது" என்றார்.







0 Response to "எமது விமானப்படை உலகில் சிறந்தது : சீனக்குடாவில் கோதபாய தெரிவிப்பு"
แสดงความคิดเห็น