jkr

யாழ் – வவுனியா பஸ் சேவைகளில் வவுனியா பயணிகளுக்கு இன்னும் அனுமதி இல்லை


யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குப் பயணிகளை ஏற்றி வருகின்ற பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் தென்பகுதிக்கு வந்த பயணிகள் மட்டுமே பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வவுனியாவில் உள்ளவர்கள், இந்த பஸ் வண்டிகளில் ஏறி யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியாது. அதற்கான பிரயாண அனுமதி வழங்குவதற்கான ஒழுங்குகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டின் தென்பகுதிக்கு வந்தவர்கள் மட்டும், தாங்கள் அங்கிருந்து வந்ததற்கான பிரயாண டிக்கட்டுகளை ஆதாரமாகக் காட்டி யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு வவுனியா கண்டி வீதியில் உள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் இணைப்பு அலுவலகத்தில் வைத்து இராணுவத்தினரால் அனுமதி வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பில் இருந்து வரும் பயணிகள் காலையிலேயே ரம்யா ஹவுஸ் இராணுவ அலுவலகத்திற்குச் சென்று டோக்கன் பெற்று நீண்ட நேரம் காத்திருந்த பின்பே யாழ்ப்பாணம் செல்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதி பெறுகின்றவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு பகல் 12..30 அல்லது ஒரு மணியளவில் வந்தடையும் பஸ்வண்டிகளில் பிரயாணம் செய்கின்றார்கள். இராணுவ வாகனத் தொடரணியில் வருகின்ற இந்த பஸ் வண்டிகள், மாலை 5 மணி அல்லது 6 மணியளவில் வவுனியா ரம்யா ஹவுஸ் இராணுவ அலுவலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறுப்பட்டுச் செல்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற பயணிகள் வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதும், அவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படுகின்ற யாழ்தேவி இன்ரசிற்றி ரயிலில் அல்லது இரவு 10 மணிக்குப் புறப்படுகின்ற இரவு தபால் ரயிலில் பயணம் செய்கின்றார்கள் என்பது குறி்ப்பிடத்தக்கது. வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடுகின்ற ரயில் வண்டிகளில், ஒரேயொரு ரயில் மாத்திரமே மதவாச்சியில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கி சோதனையிடப்பட்டு விபரங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரயாணத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி அதிகாலை 5.45 மணிக்குப் புறப்படுகின்ற யாழ்தேவி இன்ரசிற்றி ரயில் மாத்திரமே இவ்வாறு கொழும்பில் இருந்து வரும்போதும், வவுனியாவில் இருந்து திரும்பிச் செல்கின்ற போதிலும் மதவாச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறக்கி சோதனையிடப்படுகின்றனர். ஏனைய ரயில்கள் எதுவும் மதவாச்சியில் சோதனையிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ் – வவுனியா பஸ் சேவைகளில் வவுனியா பயணிகளுக்கு இன்னும் அனுமதி இல்லை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates