jkr

வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண் !


கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களை மேற்கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதிமன்றில் சரணடைந்துள்ளார் வெள்ளவத்தை வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வருபவர்களிடம் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் பரிசோதகர் அம்பாறை பகுதியில் கடமையாற்றுபவர் எனவும் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் ருச்சிர வெலிவத்த தெரிவித்துள்ளார். பணத்தை பறிகொடுத்தவர்கள் இவரை அடையாளம் காணும் வகையில் அடையாளம் காணும் வகையில் அடையாள அணிவகுப்பொன்றை நடாத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் ஏற்கனவே இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வெள்ளவத்தை பகுதியில் பல்வேறு கொள்ளைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி சரண் !"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates