jkr

ஆபாச பட நடிகராக விரும்பினேன்-ஷாருக்


நக்கலடிப்பதிலும், தன்னைத் தானே விமர்சனம் செய்து கொள்வதிலும் ஷாருக் கானை மிஞ்ச வேறு யாரும் கிடையாது.

நீங்கள் எப்படிப்பட்ட நடிகராக வர விரும்பினீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆபாசப் பட நடிகராக வர விரும்பினேன் என்று கூறி அதிர வைத்தார் ஷாருக்.

டெல்லியில் குரு அரிந்தம் செளத்ரியின் டிஸ்கவர் தி டயமன்ட் இன் யூ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஷாருக் கலந்து கொண்டார்.

அப்போது அவர் படு ஜாலியாக பேசினார். நான் இப்படி சூப்பர் ஸ்டாராக வர வேண்டும் என்றெல்லாம் முன்பு நினைக்கவில்லை. ஆபாசப் பட நடிகராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். இதற்காக ரொம்ப ஆர்வமாகவெல்லாம் இருந்தேன்.

ஆபாசப் படங்களில் 'பக்கா'வாக நடிக்க வேண்டும். 'நல்ல' பெயரெடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசையாக இருந்தேன். ஆனால் டிராக் மாறி இப்படியாகி விட்டேன் என்று அவர் கூறியபோது அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.

உங்களுக்கு யார் ஆதர்ச ஹீரோ என்று கேட்கப்பட்டபோது, எனக்கு எப்போதுமே சில்வர்ஸடர் ஸ்டாலன்தான் ஆதர்ச ஹீரோ. அவரும் கூட ஒரு ஆபாசப் பட நடிகர்தான் ஆரம்பத்தில். பிறகுதான் ஹாலிவுட் சூப்பர்ஸ்டாரானார் என்று கூறி அரங்கத்தை மேலும் அதிர வைத்தார் ஷாருக்.

ஷாருக்குக்கு ரொம்பத்தான் குசும்பு...!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஆபாச பட நடிகராக விரும்பினேன்-ஷாருக்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates