பாகிஸ்தானில் ஒசாமா : பிரதமர் மறுப்பு

ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார்.
லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணைச் சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கோர்டன் பிறவுண் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோதே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்தார்.
தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார்







0 Response to "பாகிஸ்தானில் ஒசாமா : பிரதமர் மறுப்பு"
แสดงความคิดเห็น