செய்தியறிக்கை
| | |
| ஒசாமா பின் லாடன் |
ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் இல்லை என்கிறார் பிரதமர் கிலானி
ஒசாமா பின் லாடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பாதாக கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார்.
லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனை சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார்.
அல் குவைதா தலைவர் ஒசாமா பின் லாடனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கார்டன் பிரவுன் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோது பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு கூறினார்.
தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாக அவர் கூறினார்.
டமாஸ்கஸில் பேருந்து விபத்தில் மூன்று யாத்திரிகர் பலி
| | |
| சம்பவ இடத்தில் சிரிய உள்துறை அமைச்சர் |
குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இது விபத்து என்று சிரியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டயர் வெடித்ததன் காரணமாக இது ஏற்பட்டதாகவும், பேருந்து பழுதுபார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் மூவர் கொல்லப்பட்டாலும், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கான ஆதாரம் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
ஷியா மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள சையதியா சைனப் என்ற புறநகர் பகுதியில் இந்தச் சம்பம் நடைபெற்றுள்ளது.
உல்பா தலைவரை கைது செய்ததாக வங்கதேசம் கூறுகிறது
| | |
தடை செய்யப்பட்ட உல்பா அமைப்பைச் சேர்ந்த அர்பிந்தா ராஜ்கோவாவும் அவரது குடும்பத்தினரும் டாக்காவில் வீட்டுக் காவலில் தற்போது உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த ஜனவரி மாதம் வங்க தேசத்தில் அவாமி லீக் கட்சி பதவிக்கு வந்ததில் இருந்தே, உல்பா உள்ளிட்ட பிரிவினை குழுக்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று பிரிவினைக் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு கூறப்படுகிறது.
கார்பன் வெளியேற்ற அடர்த்தியை குறைக்க இந்தியா உறுதி
| | |
| இந்திய இரும்பு ஆலை ஒன்று |
கடந்த வாரம், கார்பன் வாயுக்களின் அடர்த்தியை 40 முதல் 45 சதம் வரை குறைக்கப் போவதாக சீனா அறிவித்த நிலையில், இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோபன்ஹேகனில் அடுத்த வாரம் துவங்கும் புவியை வெப்பமடையச் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | |
| வன்னி மோதலின் போது அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்படவர்கள் பலரின் உடலில் இன்னமும் ரவைகள் தங்கியிருக்கலாம் என்று சந்தேகம் |
மாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோதனையில் கண்டுபிடிப்பு
இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிந்து ஆறுமாதங்கள் ஆன நிலையில், அதன் பன்முக பாதிப்புக்கள் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
போரின் போது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த இளவயது மாணவர்கள் பலருக்கு, அவர்களின் உடலிலிருந்து அவை இன்னமும் அகற்றப்படாமலிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
வழமையான காச நோய் சோதனையின் போது சில மாணவர்கள் தமது உடலில் துப்பாக்கி ரவைகள் இருந்ததாக கூறியதாகவும், உடனே அவர்களை எக்ஸ்ரே மூலம் சோதித்ததில் இது உண்மையென தெரியவந்ததாகவும் இந்த பிரச்சினையை கண்டறிந்த யாழ்மாவட்ட காசநோய் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ் ஜமுனானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதுவரை 13 மாணவர்கள் உடலில் ரவைகளும், குண்டு வெடிப்புத் துகள்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அறுவைச் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பலரின் உடலில் இது போன்ற துகள்களும், ரவைகளும் இருக்க வாய்ப்பு இருப்பதால், இது போன்ற பாதிப்புக்குள்ளான மக்கள், மருத்துவ சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் எஸ் ஜமுனானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கையில் சில இந்திய மருந்துகளின் இறக்குமதிக்குத் தடை
| | |
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளின் தரம் குறைவாக இருந்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தமிழோசையிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்த மருந்துகள் சோதனை செய்யப்பட்ட போது சில மருந்து குப்பிகளில் கண்ணாடித் துகள்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கவனம் செலுத்தும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் நிமால் ஸ்ரீபால டி சில்வா கூறுகிறார்.
இந்தியாவிலிருந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களின் குழு ஒன்று விரைவில் இலங்கை வந்து, அங்குள்ள மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளதாகவும் இந்தியத் தூதர் தம்மிடம் தெரிவித்ததாக அவர் கூறுகிறார்.
இலங்கையின் மருந்து தேவையில் 70 சதவீதம் இந்தியாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றது என்றும் அவை சுமார் 8 பில்லியன் இலங்கை ரூபாய்கள் பெறுமானம் வாய்ந்தவை என்றும் அமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
போர்ப் பகுதியில் அகப்பட்ட ட்ரக்குகளை மீட்டுத்தரக் கோரிக்கை
| | |
| அரச அதிபரின் வாகன தொடரணியின் சென்ற சில ட்ரக்குகள்(ஆவணப்படம்) |
தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரசாங்கம் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் அந்தப் பிரதேசத்திற்கு வேறு தேவைகளுக்காக ட்ரக் வண்டிகளில் சென்று வந்த பலரும் யுத்த காலத்தில் அங்கு சென்ற ட்ரக் வண்டிகள் பலவும் சேதமடைந்த நிலையில் அங்கு கிடப்பதைக் கண்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு ட்ரக் வண்டிகளை இழந்துள்ள உரிமையாளர்கள் பெரும் சிரம நிலைமைக்குத் தள்ளப்பட்டு துயரமடைந்திருக்கின்றார்கள். பலர் கடன்சுமைக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
சென்னை நதிகளை சீரமைக்க ஆணையம்
| | |
| கூவம் நதி |
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூவம் ஆற்றை சீரமைத்தல், வானூர்தி தொழிற்பூங்கா மற்றும் நிதி நகரம் ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக சிங்கப்பூர் சென்று அந்த நாட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்த விவரங்களை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தச் சந்திப்பில் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது கூவம் நதியின் இன்றைய நிலைக்குக் காரணமாகவுள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றியும், சிங்கப்பூர் நதியைப் போலவே கூவத்தையும் மாற்றியமைத்திட தேவையான நடவடிக்கைகள் பற்றியும் ஸ்டாலின் எடுத்துக்கூறியதாகவும் செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது..
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
போபால் இரசாயன ஆலை விபத்தின் நினைவு தினம்
| | |
| பாதிக்கப்பட்டவர்கள் |
அந்த ஆலையை நடத்திய அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட்டு மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
அந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிய போதிலும் நச்சு வாயுவின் பாதிப்புக்கு உள்ளாகிய லட்சக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடும், மருத்துவ உதவியும் போதாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஆலை இருந்த பகுதியில் இன்னமும் நச்சுக்கசிவு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்ற அப்பகுதி மக்கள், அதனால், தமதுகுடிநீரும் கெட்டுப் போய் விட்டதாகவும் கூறுகிறார்கள்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.







0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น