முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால், தேராவில் ஆகிய பகுதிகளில் பொலிசார் நடத்திய தேடுதலின்போது, பல வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் லொக்கு குமாரகே தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர்கள் ஜனக மகிந்த, புஸ்பித பொலிஸ் சார்ஜன்ற் அமித்த, பொலிஸ்கான்ஸ்டபிள்களான கங்கநாத், ரணதுங்க, கமல்சிறி, அல்விஸ் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினராலேயே இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டு பிளாஸ்டிக் கேன்களில் நேர்த்தியாக அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த 50 லிற்றர் அசிட், 20 கிலோ நிறையுடைய சி4 வெடி மருந்து, 69 மிதிவெடிகள், அவற்றுக்கான பியுஸ்கள் 40, 175 டெட்டனேட்டர்கள், 13 கிளேமோர் வெடிகுண்டுகள், 1231 தோட்டாக்கள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பொருட்களைக் கண்டுபிடித்துள்ள பொலிசாரை வன்னிப்பிரதேசத்திற்கான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே பாராட்டியுள்ளார்.
0 Response to "முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு"
แสดงความคิดเห็น